பொதுவாகவே திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த ஆரவாரமான வரவேற்பு இருக்கும் அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படம் என்றால் சொல்லமுடியாத அளவிற்கு திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி கொண்டு இருகின்றனர் ஆனால் அதே சமயம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளுக்கும் மக்கள் மத்தியல் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது ரியாலிட்டி ஷோ என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்நிகழ்ச்சி தொடங்கிய காலத்தில் இருந்து இப்பொழுது வரை மக்கள்

மத்தியில் மிகுந்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்று வருகிறது இந்நிகழ்ச்சி தொடங்கி இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன அதிலும் கடந்த சீசன் மிக பெரிய அளவிற்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டது எனவே கூறலாம் இந்நிகழ்ச்சி இவ்வளவிற்கு பிரபலமடைய முக்கிய காரணம் பல சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் பங்கு பெற்று நூறு நாட்கள் ஒரு வீட்டில் இருந்து பல சுவாரசியமான நிகழ்வுகளை ஏற்படுத்துவார்கள் இதனால் ரசிகர்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது அந்த வகையில்

7 வது சீசன் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன சமீபத்தில் இந்த சீசனிர்கான ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதை தொடர்ந்து இந்த  சீசனில் பங்கேற்போகும் போட்டியாளர்கள் குறித்து  நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளும் தகவல்களும் வந்த வண்ணம் உள்ளன ஏற்கனவே ரக்ஷன் , ஜாக்லின் , கிரண் , ரேக்ஹா நாயர் , பாய்வான் ரங்கநாதன் , ரவீனா , அஷ்வின்

போன்ற பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது நடிகர் விஜய்குமார் அவர்களின் மகளான தனுஷ் பட நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ளபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன ஆனால் இதுகுறித்து நடிகை ஸ்ரீ தேவி தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை ……..