கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல அசம்பாவித நிகழ்வுகள் திரையுலகில் அரங்கேறி வரும் நிலையில் தற்போது இந்த நிலை அதிகரித்து வரும் வகையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர் நடிகைகளும் நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகர் எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமாகி உள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்

மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இயக்குனராக தனது திரைபயணத்தை தொடங்கியதை அடுத்து நடிகர், தயாரிப்பாளர் , எழுத்தாளர் என பல துறைகளில் தனது திறமையால் பலரையும் வியக்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் மாரிமுத்து. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில்

தற்போது வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையிலும் பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து மிரட்டலான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை

அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் . இதையடுத்து இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இவருக்கு 57 வயதே ஆகும் நிலையில் இவரது இழப்பு பலரையும் மீளாதுய்ரதுக்கு கொண்டு சேர்த்துள்ளது……………………