தமிழ் சினிமாவில் பொறுத்தவரை பல மொழி நடிகர்களும் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருவதோடு வெகுவாக தங்களது நடிப்பு திறமையின் மூலமாக தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு

தமிழ், தெலுங்கு, கன்னடம் என எ பல மொழிகளில் வில்லன், ஹீரோ, காமெடி, குணசித்திரம் என பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் ஜெயராம். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் இவரது மகன் காளிதாசும் இளம் நடிகராக  பல படங்களில் நடித்து வருகிறார் அதோடு  இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு

முன்னர் அவரது நீண்ட நாள் காதலியான தாரிணி காலிங்கராயர் எனும் பிரபல மாடலுடன் உடன் நிச்சயதார்த்தம் முடிந்தது மேலும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அடுத்த கட்டமாக அவரது மகளான மாளவிகாவிற்கும் நிச்சயம் நடந்து முடிந்துள்ளது . இதையடுத்து அந்த நிச்சய

விழாவில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்ட நிலையில் அந்த விழாவில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரது மகளுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்……………………