தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு திரையுலகிலும் தனக்கென  தனி ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் சின்னத்திரையில் தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் தனது நடிப்பு மற்றும் பேச்சு

திறமையால் பலரது  கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த  நிலையில் இன்றைக்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தொடர்ந்து இவரது நடிப்பில் பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இவரது நடிப்பில் அயலான் உருவாகி

உள்ளதை அடுத்து இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாக உள்ளது. இதையடுத்து இந்த படம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படி இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் புகைபடம் ஒன்று வெளியாகி சிவா ரசிகர்கள்பலரையும் வியப்படைய செய்துள்ளது. காரணம் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த சபா நாயகன்

படத்தில் அவருக்கு நண்பனாக நடித்த இளைஞர் அப்படியே அச்சு அசல் சிவகார்த்திகேயனை உரித்து வைத்தாற்போல் இருப்பதோடு பத்து வருடங்களுக்கு முன்னர் பார்த்தது போல உள்ளார் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் . மேலும் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ,மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…………………